Lyrics - Vinothane vinothane thenavan, வினோதனே வினோதனே - தென்னவன்

Vinothane vinothane thenavan


வினோதனே வினோதனே - தென்னவன்

வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே
மனதினில் காதலில் சாரல் அடிக்கிறதே

"வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

ஓவிய பெண்ணே தூரிகையாலே சூரியன் என்னை சிறை எடுத்தாய்
மாபெறும் மலைகள் ஆயினும் கூட மல்லிகை பூக்கள் உடைத்திடுமே

உன்னை தினம் சுமப்பதால் போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால் மயக்கம் பிறக்கின்றதோ

விறகென இருந்தேன் இதழ்களை செதுக்கி புள்ளங்குலலாய் இசைக்கின்றாய்
அழகே நீ தான் அதிசிய விளக்கு அணைக்கின்ற பொழுதும் எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களே கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே சிங்கத்தை பிடிக்கின்றாய்

The topic on Lyrics - Vinothane vinothane thenavan is posted by - Mallu

Hope you have enjoyed, Lyrics - Vinothane vinothane thenavanThanks for your time

Tech Bluff