Lyrics - Vaagai sooda vaa sara saara, சர சர சார காத்து வீசும் போது

Vaagai sooda vaa sara saara

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

எங்க ஊரு பிடிக்குதா... எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல... சுட்ட ஈரல் மணக்குதா
முட்டை கோழி பிடிக்கவா... முறை படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கயில்... என்ன கொஞ்ச நினைக்க வா
கம்மஞ்சோறு ருசிக்க வா... சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடகத்தா ரசம் வச்சு மடக்க தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்குற

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

புல்லு கட்டு வாசமா... புத்திக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தம்மா... மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுற... கையளவு மனசுல
கையெழுத்து போடுற... கன்னி பொண்ணு மார்புல
மூனு நாளா பாக்கல... ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டு கல்லு குழியில ஒறங்கி போகும் பூனையா
உன்னை வந்து பாத்து தான் கிறங்கி போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற

காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கு என்ன காச்சலா

The topic on Lyrics - Vaagai sooda vaa sara saara is posted by - Maha

Hope you have enjoyed, Lyrics - Vaagai sooda vaa sara saaraThanks for your time

Tech Bluff