Lyrics - Simbu jothika manmadhan, மன்மதனே நீ கலைஞன் தான்

Simbu jothika manmadhan

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்

என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னைக் கண்ட நொடி ஏனோ
இன்னும் மறையல்ல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

"எத்தனை ஆண்களைக் கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உனைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை"

[மன்மதனே நீ கலைஞன் தான்...]

நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
"எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்"

அழகாய் நானும் ஆடுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா

ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ
நண்பனே எனக்குக் காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ

மன்மதனே உனை பார்க்கிறேன்
மன்மதனே உனை ரசிக்கிறேன்
மன்மதனே உனை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெக்கம் மறக்கவோ
எந்தன் படத்திற்கு உந்தன் பெயரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதித் தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்ப் பார்த்துக் கொள்ள

The topic on Lyrics - Simbu jothika manmadhan is posted by - Malu

Hope you have enjoyed, Lyrics - Simbu jothika manmadhanThanks for your time

Tech Bluff