Lyrics - Oru vetkam varudhe pasanga, ஒரு வெட்கம் வருதே வருதே
Oru vetkam varudhe pasanga
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே....
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே....
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே...
இனி இது தொடர்ந்திடுமே....
இது தரும் தடம் தடுமாற்றம் ...சுகம்
மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே...
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே....
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே...
துடித்துடித்திடும் மனமே…
வர வர வரக் கரைத்தாண்டிடுமே
மேலும் சில காலம்
உன் குறும்பிலே... நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால்....உறங்குவேன்
ஆணின் மனதிற்க்குள் ...
பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே …
நெஞ்சம் துடிக்கிறதே
பெண்:
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே...
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே...
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
இது முதல் அனுபவமே...
இனி இது தொடர்ந்திடுமே...
வர வர வரக் கரைத்தாண்டிடுமே…
தில்லாரே தில்லாரே தில்லா தில்லாரே…
தில்லாரே தில்லாரே...
ஓஹோ ஹா...
காற்றில் கலந்து நீ
என் முகத்தினை
நீயும் மோதினாய்...
பூ மரங்களில்
நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்...
ஓ...
தூது அனுப்பிடவே …
நேரம் எனக்கில்லையே…
நினைத்தப்பொழுதினிலே…
மரணம் எதிரினிலே...
வழிகளில் ஊர்கோலம்
இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே
நனைந்திடுவோம் நாள்தோறுமே..
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே...
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே...
ஓ...போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே...
இனி இது தொடர்ந்திடுமே....
வர வர வரக் கரைத்தாண்டிடுமே…
The topic on Lyrics - Oru vetkam varudhe pasanga is posted by - Mallu
Hope you have enjoyed, Lyrics - Oru vetkam varudhe pasangaThanks for your time