Lyrics - Nizhal nijamagirathu, இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ?
Nizhal nijamagirathu
இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ?
இதுவரை நடித்தது அது என்ன வேதம்? இது என்ன பாடம்?
இலக்கணம் மாறுதோ?..
கல்லான முல்லை இன்றென்ன வாசம்?
காற்றான ராகம் ஏனிந்த கானம்?
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லி தந்தார் மழைக்காலம் என்று?
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ? பெண்மை தந்தானோ!இலக்கணம் மாறுதோ?....
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாதாதலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ?விளக்கி வைப்பாயோ?..
தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டு பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்?
மறுபடி திறக்கும் உனக்கு ஒரு பாதை ..உரைப்பது கீதை..
மணி ஓசை என்ன? இடி ஒசை என்ன?
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்க கண்டேன்..
நீ எது? நான் எது? ஏனிந்த சொந்தம்? பூர்வஜன்ம பந்தம்..இலக்கணம் மாறுதோ...
இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ..
The topic on Lyrics - Nizhal nijamagirathu is posted by - Maha
Hope you have enjoyed, Lyrics - Nizhal nijamagirathuThanks for your time