Lyrics - Merkey uthikkum suriyane citizen song, மேற்க்கே விதைத்த சூரியனே

Merkey uthikkum suriyane citizen song



படம் (Movie) : சிட்டிசன்
பாடல் (Song) : மேற்க்கே விதைத்த சூரியனே
Music Director : தேவா
பாடியவர் Singer: திப்பு
கவிஞர் : வைரமுத்து

மேற்க்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
மேற்க்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
ஒளிசாட்டை எடுத்தால் என்ன
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து

கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு
கல்லறைகள் அல்ல
சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா
வானம் உண்டு வெல்ல
வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல
இதயம் துணிந்து எழுந்த பின்னாலே
இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே
நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்
விரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும்

சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம்
தீ வளர்த்து பார்ப்போம்
விடியல் வரும் முன்னே இருள் எடுத்து கொள்வோம்
குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம்
குனிந்த கதை போதும்
பொறுமை மீறும் பொது
புழுவும் புள்ளி ஆகும்

தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில் சிலந்த்யின் வலையா
முகத்திலே படித்தவர் ஒன்றாய் திரட்டுவோம்
நிலத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும்

மேற்க்கே விதைத்த சூரியனே உன்னை
கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
ஒளிசாட்டை எடுத்தால் என்ன
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து

The topic on Lyrics - Merkey uthikkum suriyane citizen song is posted by - Maha

Hope you have enjoyed, Lyrics - Merkey uthikkum suriyane citizen songThanks for your time

Tech Bluff