Lyrics - Mandram vandha thendralaku tamil video song, Mohan Hits Mandram Vandha thendralaku

Mandram vandha thendralaku tamil video song

Mandram Vandha thendralaku tamil video song - Monah hits

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும் வானம் உந்டோ சொல்
(மன்றம்)


தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

(மன்றம்)

மேடையைப் போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

The topic on Lyrics - Mandram vandha thendralaku tamil video song is posted by - Mohan

Hope you have enjoyed, Lyrics - Mandram vandha thendralaku tamil video songThanks for your time

Tech Bluff