Lyrics - Kanden kadhalai lyrics, Naan mozhi arinthen

Kanden kadhalai lyrics


நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் -அன்று
நான் வழி அறிந்தேன் உன் பாதையில்
நான் எனை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே - இன்று
நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே (நான் மொழி)

"நல்லதொரு பூவாசம் நானறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நானறியேன்
என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நானறியேன்"

காற்றை போல வீசியவள் கையை வீசி போனதெங்கே
ஊற்றை போல பேசியவள் ஊமையாகி போனதெங்கே

வாழ்வை மீட்டு கொடுத்தவளே
நீயும் தொலைந்து போனதெங்கே (நான் மொழி)

"கண்ணிமையில் ஓர் ஆசை ஊஞ்சல் இடும் வேளையில்
உண்மைகளை உள் மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க ஆசைபட்ட வேளையில்
உன் மடியில் தூங்கும் நிலை நியாமில்லை"

மேகம் நீங்கி போகும் என நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழப்போகும் வாழ்க்கையிலே நமது கையில் ஏதுமில்லை (நான் மொழி)

The topic on Lyrics - Kanden kadhalai lyrics is posted by - Malu

Hope you have enjoyed, Lyrics - Kanden kadhalai lyricsThanks for your time

Tech Bluff