Lyrics - Avvai shanmugi song lyrics, அவ்வை ஷண்முகி காதலில் தவிக்கிறேன்
Avvai shanmugi song lyrics
படம் (Movie) : அவ்வை ஷண்முகி
பாடல் (Song) : காதலி காதல
Music Director : தேவா
பாடியவர் Singer: ஹரிஹரன்
கவிஞர் : வைரமுத்து
காதலி... காதலி... காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
நாள் தோரும் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும்
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொள்ளும்
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று வருமோ...
(காதலி )
ஓயாத தாபம் உண்டான வேகம் நோயானதே நெஞ்சம்
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம்
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...
காதலி... காதலி... காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
The topic on Lyrics - Avvai shanmugi song lyrics is posted by - Maha
Hope you have enjoyed, Lyrics - Avvai shanmugi song lyricsThanks for your time