Tamil - Dr vijay vettaikaran fun jokes, Vijay fun in college

Dr vijay vettaikaran fun jokes

This are some of the fun sms which was used to make fun on the actor vijay, These jokes are just for fun and not to hurt their FANS. He have really made a place in heart of tamil peoples.


1. ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் பேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் பேமஸ்(famous). ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா! அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்!”னுச்சாம்.


2. குருவி செத்துப் போச்சு; வில்லு ஒடைஞ்சு போச்சு. வேட்டைக்காரன் வந்து மட்டும் என்னத்த வெட்டி முறிக்கப் போறான்?


3. ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா? அது விஜய்யோட ‘குருவி’!


4. நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!” இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டேஇருந்தாராம்.


5. விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”


6. விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்‌ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.


7. விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா
தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!8. ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?

மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க


9.பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.சாதனைகள்:

ரசியர்கள் : நாங்க 48 டிகிரி குளிரில் வாழ்றோம் நாங்கதான் க்ரேட்

அரபியர்கள் : நாங்க 48 டிக்ரி வெயிலில் வாழ்றோம் நாங்கதான் க்ரேட்.

Tamilan: நாங்க 48 படம் விஜயோட படம் வந்தும் வாழ்றோம், கொய்யால யார்கிட்டேபஸ் காமெடி:

டாக்டர் : எப்படிப்பா அடிப்பட்டுச்சி

சீக்காளி : பஸ்ல விஜய் படம் போட்டாங்க. தியேட்டர்னு நினைச்சி பஸ்ல இருந்து வெளியே குதிச்சிட்டேன்


செஸ் காமெடி:

அஜித் : செஸ் விளையாடலாமா

விஜய் : நீங்க க்ரவுன் போங்க, நான் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டு வந்துடறேன்


கமல், விஜய் வேறுபாடு:

கமல் ஒரே படத்துல 10 வெவ்வேறு கெட்டப் போட்டாரு, விஜய் பத்து தெலுங்கு படத்தில இருந்து ஒரே மாதிரியா 10 படத்துல ஒரே கெட்டப்ல நடிச்சாரு

டைரக்டர் காமெடி:

இயக்குனர் : வடிவேல போடலாம கருணாஸ் போடலாமா

விஜய் : காமெடியும் நானே பண்ணிடறேனே.

டைரக்டர் : நீங்கதான் காமெடியன், நான் கேட்டது ஹீரோவா யார போடலாம்னு


டாக்டர் விஜய்:

டாக்டர் விஜய் மினரல் வாட்டர் வாங்கிட்டு சத்தம் போடுறார்

விஜய் : என்ஹ்கேய்யா இதுக்கான ப்ரீ

கடைக்காரர் : இதுக்கு ப்ரீ எதும் இல்லையே

விஜய் : நான் டாக்டர் என்னையே ஏமாத்துறியா, இதுலதான் பாக்டிரியா ப்ரீனு போட்டிருக்கே


தேர்வறையிலே:

விஜய் : தல கொஞ்சம் உன் பேப்பரை காட்டு தல

தல: யோவ் இது ஹிந்தி பேப்பர்யா, நீ தமிழ் பேப்பர் எழுதிட்டு இருக்க

விஜய் : பரவாயில்லே தல, நான் ரீ மேக் பண்ணிக்கிறேன்

தல : இதுகு பிச்சை எடுக்கலாம்


சன் டீவி:

விஜய் : சன் டிவி மேல கேஸ் போடனும்

எஸ் ஏ சி : ஏன் என்னாச்சி

விஜய்: என் அடுத்த படம் வெற்றி பெறும்னு சொன்னதை விளையாட்டு செய்திகளில் காமிச்சிட்டாங்க.

The topic on Tamil - Dr vijay vettaikaran fun jokes is posted by - Maha

Hope you have enjoyed, Tamil - Dr vijay vettaikaran fun jokesThanks for your time

Tech Bluff