Tamil - Skandha Guru Kavasam, ஸ்கந்த குரு கவசம் வரிகள்

Skandha Guru Kavasam

ஸ்கந்த குரு கவசம் வரிகள்
இயற்றியவர்: ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள்

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே

ஸ்கந்த சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குக சரணம் சரணம்

குறுகுக சரணம் குருபர சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்த சரணம்
தனித் தானறிந்து நன் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்

அவதூத சத்குருவை ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
ஆறாம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முக சரணம் சரணம் ஸ்கந்த குரோ

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாத
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருக போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய்

தகப்பன் சுவாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
சுவாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே

ஆறுமுக சுவாமி உன்னை அருட்ஜோதியைக் காண
அகத்துள்ளே குமார நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்ராகித்திடுவையே
வேலுடைக் குமார நீ விதையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் கலனை விரட்டிடவே

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்த
பரஞ் ஜோதியும் கட்டி பரிபூர்ணமக்கிடுவை
திருமலை முருக நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமார மும்மலம் அகற்றிடுவாய்

அடிமுடின் யாரியவோன அன்ன மலையோனே
அருணாசலக் குமார அருணகிரிக்கு அருளியவ
திருப்பரங்கிரிக் குஹனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனை அக்கிடுவை
எட்டுக்குடிக் குமார ஏவல்பில்லி சூனியத்தை

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்த எண்கள் முருக நீ
என்னுள் அறிவை நீ உள்ளொளியை வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருக திருவடியே சரனமைய

அறிவொளியை வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவ
ஜகத்குரோ சிவகுமார சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தரும்
சிக்கல் சிங்கரா ஜீவனைச் சிவனக்கிடுவை

குன்றக்குடிக் குமார குருகுஹனை வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மைத்திடுவீர்
பச்சைமலை முருக இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருக மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்கம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
கந்த மழைக் குமார கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகன் நீ மனத்தகத்துள் வந்திடுவீர்

கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியை வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலைஎலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் கத்திடுவீர்

ஏழ்மை அகற்றிக் கந்த எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமார மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்த உன்பதம் பணிந்துவப்பேன்

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனை வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் அணை நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமார சரணம் சரணம் ஐய
அபயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மன்கற்று வானதிலும்

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமக்கிடுவை
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தன முருக கந்த
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தைத் thandhaiyAi முருக தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமைச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பலனே ஸ்கந்தகுரோ

ஆதிமூலமே அறுவை உருவை நீ
அடியனைக் காத்திட அறிவை வந்தருள்வாய்
உள்ளொளியை முருக உடனே நீ வா வா வா
தேவாதி தேவ சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமார விரைவில் நீ வந்திடப்பா

கன்பன யாவுமைக் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடரை மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன்


உன்துணை வேண்டினேன் உமையவள் குமார கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உணருளே அருள்வது உன் கடநேயம்
உன் அருளாலே உந்தல் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் கட்சியை அகத்துளே கட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு

அனுக்கிரகித்திடுவை அதிகுருனத கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நன் மறந்து
நல்லதும் கேட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய்


அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் கத்திடுவை அறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் அக்கிடுவை

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா


ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தத் கொண்டிடுவாய்


சத்ருப் பகைவர்களை சண்முக ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும்

மேற்குத் திக்கில் என்னை மல்மருக ரட்சிப்பை
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரட்சிப்பை
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவை
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோரும் எனை பறந்துவந்து ரட்சிப்பை

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரட்சிப்பை
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும்

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தன உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும்

கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மரபையும் வயிற்றையும் வல்லிமநலன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மத்தடிதன் காக்கட்டும்

ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உத்தரத்தை எல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்களை இணையான கால்களையும்
புரங்கள் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே

உரோமத் துவரம் எல்லாம் உமைபால ரட்சிப்பை
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா கத்திடுவீர் அமரர் தலைவா கத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியை இருந்தும்
முருக எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர்

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் சாம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
கலாம் சௌம் நமஹா என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திட்ட
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தளம் ஆகுமப்ப

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையட
கலனை நீ ஜெயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தல் சுப்ரமணிய குருநாதன்

தன்னொலிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தனிருப்பன்
ஜகமையை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும்

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவை நீ
கோடித்தரம் ஜபித்துக் கொடிக்கான வேண்டுமப்ப
கொடிகனச் சொன்னதை நீ நடிடுவை மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவன்
நின்னையே நன் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்த வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா

பகுத்தறிவான கந்தன் parangundril irukkindrAn
பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவ பிரணவப் பொருளோனே
பிரவ வரமருளி பிரம்ம மயமக்கிடுவை
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தங்கி விட்டாய்

பழமுதிர் சோலையில் நீ பரஞ்சோதி மாமனை
சுவாமி malaiyilE சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவை அமர்ந்திட்டோய்
கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ச்கந்தச்ரம ஜோதியே

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் கத்திடுவை
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ கத்திடுவை
ஸ்கந்த சரணம் ஸ்கந்த சரணம்

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வருமே
சரவணா பவனே சரவணா பவனே
உன்னருளாலே நன் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்த உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய்

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நன்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நன்
மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நன்
ஸ்கந்த உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் கலைந்திடுவை
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருக உன்னைத் திடமுற நினைத்திடவே

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வகையினால்
அத்வை ஆனந்தத்தில் இமைப்பொழுது அழ்த்திடுவை

ஞான பண்டித நான்மறை வித்தாக கேள்
ஸ்கந்த குருநாத ஸ்கந்த குருநாத கேள்
மெய்ப்பொருளைக் கட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய்

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாபா உடலைப் பரிசுத்த மக்கிடுவை
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிச்சை அழித்து ஒழித்திடடா

மேய்யருலம் உன்னருளில் முருக இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே

அரைக் கணத்தில் நீயும் அடி வருவாயப்பா
வந

The topic on Tamil - Skandha Guru Kavasam is posted by - Anu

Hope you have enjoyed, Tamil - Skandha Guru KavasamThanks for your time

Tech Bluff