Lyrics - Neeye neeye m kumaran so mahalakshmi, நீயே நீயே நானே நீயே

Neeye neeye m kumaran so mahalakshmi


நீயே நீயே நானே நீயே- M.குமரன் s/o மகாலட்சுமி(Neeye neeye - M.Kumaran S/O Mahalakshmi)

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

ஏப்ரல் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே
ஐ லைக் யு
செப்டம்பர் வான் மழை நீயே
ஒக்டோபர் வாடையும் நீயே
ஐ தேங்க் யு
உன்னை போல் ஒரு தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

you are the love of my life and my dreams forever
you are the love of my heart and my love forever

என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணிரே கூடாதென்ரும்
என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே அந்நாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில் நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே
நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

ONE a TWO a THREE a FOUR a

வேருக்கு நீரை விட்டாய் நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க

புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

The topic on Lyrics - Neeye neeye m kumaran so mahalakshmi is posted by - Malu

Hope you have enjoyed, Lyrics - Neeye neeye m kumaran so mahalakshmiThanks for your time

Tech Bluff