Tamil - Unakaga kavithai yealuthiyavudan athu thani alagu paduthikolvathu pol, கண்ணாடியில் முன்னும் பின்னும் பார்த்து &
Unakaga kavithai yealuthiyavudan athu thani alagu paduthikolvathu pol
உனக்கான கவிதை எழுதியவுடன்
அது தன்னை முன்னும் பின்னும்
அழகுபடுத்தி கொள்கிறது...
புதிதாய் புடவை அணிந்தவள்
கண்ணாடியில் முன்னும் பின்னும் பார்த்து
அழகுபடுத்தி கொள்வது போல..
**********************************************
இத்தனை கவிதைகளை
நான் எங்கே இருந்து திருடுகிறேனோ..?
என நீ யோசிக்கிறாய்.
இத்தனை அழகுகளை
நீ எங்கே இருந்து திருடுகிறாயோ..?
என நான் யோசிக்கிறேன்.
************************************************
தொடர்ந்து படித்தால் சோர்வு ஏற்படும்...
இடை இடையே
என்னை நினை...!!
தொடர்ந்து மௌனமாய் இருந்தால் ....
மொழி மறந்து போகும்...
இடை இடையே
ஒரு குறுஞ்செய்தி அனுப்பு...!!
The topic on Tamil - Unakaga kavithai yealuthiyavudan athu thani alagu paduthikolvathu pol is posted by - Malu
Hope you have enjoyed, Tamil - Unakaga kavithai yealuthiyavudan athu thani alagu paduthikolvathu polThanks for your time