Tamil - Moondram pirai song kamalhasan, மூன்றாம்பிறை - கண்ணே கலைமானே

Moondram pirai song kamalhasan

படம் : மூன்றாம்பிறை
பாடல் : கண்ணே கலைமானே

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்திப் பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஒராரிரோ
ராரிராரோ ஒராரிரோ

(கண்ணே...)

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பான் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே...)

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தின்னில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி

(கண்ணே...)

The topic on Tamil - Moondram pirai song kamalhasan is posted by - Maha

Hope you have enjoyed, Tamil - Moondram pirai song kamalhasanThanks for your time

Tech Bluff