Tamil - Kadhal valkaiyai aalguakirathu, காதல் பொய் என்று சொன்னாய் - நட்பாக

Kadhal valkaiyai aalguakirathu


நட்பாக பழகிய
நாளில் சொன்னாய்..
"காதல் பொய் என்று..!!"
நானும்
"ஆமாம்..காதல் பொய் தான்...!"என்றேன்.
பின் காதலாகி மணமுடித்த பின் ஓர் நாள்..
சட்டை பொத்தானை போட்டபடி
"காதல் வாழ்கையை அழகாக்குகிறது..!!" என்றாய்.
நானும்...
"ஆமாம் அழகாக்குகிறது..!!"என்றேன்.
நீ சிணுங்கியபடி...
"ஆமாம் என்பதை தவிர வேறு
எதுவும் சொல்ல மாட்டீர்களா..? என்றாய்.
சிரித்தபடி சொன்னேன்
"இல்லை என்று சொல்லியிருந்தால்
நீ கிடைத்து இருப்பாயா சிணுங்கி..?"என்றதும்
கொட்டினாய் காதலாய்...!!

The topic on Tamil - Kadhal valkaiyai aalguakirathu is posted by - Tamil

Hope you have enjoyed, Tamil - Kadhal valkaiyai aalguakirathuThanks for your time

Tech Bluff