Tamil - Indraiya unavu nalaya unnavu, இன்றைய உணவு நாளைய நோய்
Indraiya unavu nalaya unnavu
ஒரு இணை இணைந்த மணவிழாவில்தான்
என் இணையை இழந்தேன்..
ஒற்றை செருப்பு.
***********************************************************
பாராட்டித்தான் உன் நண்பனாக நீடிக்க முடியுமென்றால்
உன் எதிரியாக இருந்தே விமர்சனம் செய்து உன்னை
விளம்பரம் செய்கிறேன்.
***********************************************************
மோர் போய் காப்பி வழக்காயிற்று...
திண்ணை இடித்து மதில் சுவர் எழும்பியாச்சு....
அடுத்த நோய் என்ன...?
**********************************************************
இன்றைய உணவு நாளைய நோய்
பற்றி சிந்திக்கிறது...
உனக்கு எதிரி உனக்குள்ளே...!!
*********************************************************
நான் ருசித்ததை என் மகன்
படத்தில் மட்டும்தான் காண்பானோ...?
இரவோடு இரவாக நட்டினேன் ஒரு "மா" மரம்...!!
The topic on Tamil - Indraiya unavu nalaya unnavu is posted by - Malu
Hope you have enjoyed, Tamil - Indraiya unavu nalaya unnavuThanks for your time