Tamil - Get relaxed by sleeping exercise thungam thuguvathu, தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எப்படி

Get relaxed by sleeping exercise thungam thuguvathu


தூங்காமல் தூங்குவது என்பது தூக்கமும் அல்ல. விழிப்பும் அல்ல. அது அறிவோடு கூடிய இனிமையான விழிப்பு நிலையாகும். இதையே அறிதுயில் என்று மறைமலை அடிகள் கூறியுள்ளார். இந்நிலையில் மனம் ஒருமுகப்பட்டிருக்கும். உடல் ஓய்வாகவும், தளர்வாகவும் இருக்கும். தூங்காமல் தூங்கும் பயிற்சிக்கு 30 நிமிடம் போதும். வெறும் வயிற்றுடன் இருக்க வேண்டும்.அதாவது சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து செய்யலாம். ஒரு விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகளை பக்கவாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். உடம்பை இறுக்கம் இல்லாமல் தளர்வாக வைத்துக்கொள்ளவும். இலேசாக கண்களை மூட வேண்டும். உள்மனதோடு தொடர்பு கொள்ள முதலில் வெளிமனதை செயல் இழக்க செய்ய வேண்டும்.

அதற்கு சிறிது நேரம் இரு நாசிகளாலும் மூச்சை நிதானமாக உள் இழுத்து மெதுவாக வெளிவிடவும். அதே சமயத்தில் உங்கள் உடலையே மனக்கண்ணால் பார்க்கவும். இப்படி ஐந்து நிமிடம் இருக்கவும். பின் கீழ்கண்டவாறு மனதுக்குள் சொல்லிக்கொள்ளவும்.இப்போது எனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஓர் இனிமையான உணர்வு என் உடல் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இப்போது நான் ஓர் இனிமையான உணர்வு நிலையில் மிதந்துக் கொண்டிருக்கிறேன். இந்த இனிமையான உணர்வு நிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இப்போது எனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என் உடலின் எல்லா உறுப்புகளும் எல்லா தசைகளும் எல்லா நரம்புகளும் ஓய்வாக, தளர்வாக இருக்கின்றன. இந்த இனிய ஓய்வு நிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.இப்படி மனதுக்குள் கூறிவிட்டு சிறிது நேரம் அமைதியாக உங்கள் உடலையே பார்க்க தளர்வாகவும் தோய்வாகவும் இருப்பதாக உணருங்கள். இப்போது ஆழ்ந்த அறிதுயிலில் இருக்கிறேன். இப்போது வெளிமனம் அடங்கியிருக்கும்.

உங்களுக்கு மகிழ்ச்சி அழிக்கக்கூடிய சுற்றுலா இடத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில் உங்களுக்கு உரிய குறிக்கோளை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொடுங்கள். நான் நல்லவன். என்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் நம்பிக்கையோடு இருக்கின்றேன். நான் நாளுக்கு நாள் எல்லாவகையிலும் பெருகி வருகிறது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இப்படி பத்து முறை மனதுக்குள் சொல்லிக்கொண்டு பிறது நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இன்று மனிதன் பல பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறேன். நிம்மதி இழந்து மனஇறுக்கத்துடன் வாழ்கிறான். மனஇறுக்கத்தால் உடலின் பல பகுதிகளிலும் பிராண தி அடைப்பட்டு நோயாளி ஆகிறான். ஒருவர் தூங்காமல் தூங்கி அந்த மயக்க நிலையிலிருந்து வெளிவரும் சமயம் அவர் அனுபவித்து அடைய வேண்டிய ஆனந்தமாகும். இக்கலையால் மனச்சோர்வையும், தாழ்வு மனப்பான்மையும் போக்கலாம். இரவில் நிம்மதியாக உறங்கலாம்.

The topic on Tamil - Get relaxed by sleeping exercise thungam thuguvathu is posted by - Malu

Hope you have enjoyed, Tamil - Get relaxed by sleeping exercise thungam thuguvathuThanks for your time

Tech Bluff