Health - Paneer tikka, பனீர் டிக்கா
Paneer tikka
தேவையான பொருட்கள்
பனீர் - 250 கிராம்,
குட மிளகாய் - 1,
பெரிய தக்காளி - 1,
பெரிய வெங்காயம் - 1.
பல்குச்சி - 20.
மசாலாவுக்கு:
==============
தயிர் - அரை கப்,
புதினா - 1 கைப்பிடி,
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி,
பூண்டு - 2 பல்,
எழுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி,
பச்சை மிளகாய் - 4,
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
சாட் மசாலா - 1 தேக்கரண்டி,
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
1) பனீர், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தை ஒரு அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும்.
2) பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து நைசாக அரைக்கவும்.
3) அரைத்த விழுதுடன் தயிர், கரம் மசாலா, மஞ்சள் தூள், எழுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.
4) அதனுடன் பனீர், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தை சேர்த்து பிரட்டி, அரை மணிநேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
5) வெளியே எடுத்து ஒரு பல்குச்சியில் (டூத் பிக்) பனீர், வெங்காயம், குட மிளகாய், தக்காளி என மாற்றி மாற்றி குத்தவும்.
6) இதே போல் எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
7) மைக்ரோ அவனில் 15 நிமிடம் வைத்து லேசான ப்ரவுன் கலர் வரும் வரை கிரில் செய்யவும்.
8) அவ்வப்போது வெளியே எடுத்து வெண்ணெயை அதன் மேலே தடவி, திருப்பி வைக்கவும்.
9) சில வகை அவனில் லேசான ப்ரவுன் கலர் வருவதற்கு 20 நிமிடம் கூட ஆகலாம்.
10) வெளியே எடுத்து சாட் மசாலா தூவி, நறுக்கிய வெள்ளரி, தக்காளியுடன் பரிமாறவும்.
11) சுவையான பனீர் டிக்கா ரெடி.
The topic on Health - Paneer tikka is posted by - Chef sanjeev
Hope you have enjoyed, Health - Paneer tikkaThanks for your time