Health - Narambu thalarchi nervous weekness, அஸ்வகந்தா சூர்ணம் நரம்பு தளர்ச்சியை போக&
Narambu thalarchi nervous weekness
நரம்பு தளர்ச்சியை போக்கும் - ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் - சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம் (ref-பாவப்ரகாச நிகண்டு)தேவையான மருந்துகள்:
சீமை அமுக்கிராக் கிழங்கு - அஸ்வகந்தா (போதிய அளவு)
செய்முறை:
நன்கு தேறிய சீமை அமுக்கிராக் கிழங்கை கல், மண் நீக்கி சுத்தம் செய்து நுண்ணிய தூளாக்கவும். பின்னர் அதைச் சலித்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
2 முதல் 4 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் உணவுக்கு முன்.
அனுமானம்: பால், தண்ணீர், சர்க்கரை
தீரும் நோய்கள்:
பலவீனம் (தௌர்பல்ய (அ) அசக்த), நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய), தூக்கமின்மை (அநித்ர), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), சிறுநீருடன் விந்து வெளிப்படல், தானே விந்து நழுவுதல் (சுக்ரமேஹ), வாத நோய்கள் (வாதவிகார).
க்ஷயரோகத்தில் இது 600 மி.கி. திரிகடுகுச் சூரணம், 600 மி.கி. சீந்தில் சர்க்கரை (குடூசி சத்வ), 1500 மி.கி. கற்கண்டுடன் தரப்படுகிறது.
க்ஷீணரோகங்களிலும் (வலுவிழக்கச் செய்யும் நோய்கள்), உடல்பலமிழந்த நிலைகளிலும் இது 200 மி.கி. மூங்கிலுப்பு (வம்ஸலோசன), 200 மி.கி. சீந்தில் சர்க்கரை (குடூச்சி சத்வ), 125 மி.கி. திப்பிலி (பிப்பலீ), 200 மி.கி. லவங்கம் மற்றும் 30 -60 மி.கி. மகரத்வஜத்துடன் கலந்து தரப்படுகிறது.
தூக்கமின்மை மற்றும் எலும்பு முறிவு (அஸ்திபங்க) நிலைகளில் இது சூடான பாலுடன் தரப்படுகிறது.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயங்களில் இது 125 மி.கி. தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடி (ஸதாவரீ சூர்ண), 125 மி.கி. பால் முதுக்கன் கிழங்கு, 125 மி.கி. அதிமதுரப் பொடி (யஷ்டீமது) சேர்த்து கற்கண்டு கலந்த சூடான ஆட்டுப்பாலுடன் தரப்படுகிறது.
The topic on Health - Narambu thalarchi nervous weekness is posted by - Maha
Hope you have enjoyed, Health - Narambu thalarchi nervous weeknessThanks for your time