Lyrics - Raman thediya seethai cheran, ராமன் தேடிய சீதை - மழை நின்ற பின்பும்
Raman thediya seethai cheran
மழை நின்ற பின்பும் தூரல் போல..
உன்னை மறந்த பின்பும் காதல்.
அலை கடந்த பின்பும் ஈரம் போல..
உன்னை பிரிந்த பின்பும் காதல்.
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் பேர் வைக்கட்டுமா?
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா?
..மழை..
நீர்த்துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசையமைக்கும்
பூன்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நானிருந்தும்
தாகமினும் அடங்கவில்லை
பாதம் இரண்டு நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்!
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்.
மழைத்துளி பனித்துளி கரைந்தபின்னே
அது மறுபடி இரண்டென பிறந்திடுமா?
..மழை..
கண்ணிமைகள் கைத்தட்டியே
உன்னை மெல்ல அழைகிறதே!
உன் செவியில் விழவில்லையா?
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே!
"உன்னருகில் நானிருந்தும்
உன்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரலிருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்.
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்."
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு.
..மழை..
The topic on Lyrics - Raman thediya seethai cheran is posted by - Malu
Hope you have enjoyed, Lyrics - Raman thediya seethai cheranThanks for your time