Lyrics - Citizen film song sikki mukki, சிக்கி முக்கி கல்லு மோதுதே
Citizen film song sikki mukki
படம் (Movie) : சிடிசன்
பாடல் (Song) : சிக்கி முக்கி
Music Director : தேவா
பாடியவர் Singer: சாதனா சர்கம் ,சங்கீத மகாதேவன்
கவிஞர் : வைரமுத்து
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும் தீயோடு
பூவோடு சிற்றின்ப மாநாடு
தேகங்கள் பரிமாறும்
விருந்தொன்று நிகழ்கின்றது
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
என் பசி அறிந்து பால் குடத்தை
பக்கம் வைத்து போனவர் யாரோ
நம்மை பூவுக்குளே பூட்டி வைத்து
சாவியை தொலைத்தவர் யாரோ
ஒ முத்த ஈரத்திலே ஈரத்திலே
எரிமலை அனைத்து யாரோ
உன் உதட்டு வழி பள்ளங்களில்
என் உயிரை புதைத்து யாரோ
நீ நீ தானா
தேகத்தை இணைத்து காவல் துறை
மோகத்தை வளர்த்தது காமன் துறை
கை நான்கும் மெய் ரெண்டும் பின்னும் வேலை
அப்போது சபதம் கொண்டேன்
இப்போதோ சலனம் கண்டேன்
பெண் மூச்சு காற்று மோதி
மோதி காடு எரிய கண்டேன்
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
இந்த பூமிக்குலே தங்கமுண்டு
அதை கருவிகள் தெரிவிக்க வேண்டும்
ஓர் ஆணுக்குள்ளே சுகங்கள் உண்டு
அதை பெண் வந்து அறிவிக்க வேண்டும்
வான் மேகங்களை துடைப்பதற்கு
வலி மேவிய காற்றொன்று வேண்டும்
என் மோகங்களை துடைப்பதற்கு
மீசை முறுக்கிய முத்தம் ஒன்று வேண்டும்
நீ தருவாயா
எத்தனை சுகம் என்று அறிந்து கொண்டேன்
இழந்த சுகதக்கு வருந்துகின்றேன்
சிற்றின்பம் பேரின்பம் ஒன்றே என்றேன்
செவ்வாயில் முத்து குளித்தாய்
ஹய்யய்யோ செத்து பிழைத்தேன்
ஆண் சிங்கம் என்றும் சைவம் அல்ல
இங்கே தான் கண்டு பிடிதேன்
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும் தீயோடு
பூவோடு சிற்றின்ப மாநாடு
தேகங்கள் பரிமாறும்
விருந்தொன்று நிகழ்கின்றது
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூளுதே
The topic on Lyrics - Citizen film song sikki mukki is posted by - Maha
Hope you have enjoyed, Lyrics - Citizen film song sikki mukkiThanks for your time