Lyrics - Badshah azhagu nee nadanthal nadai azhagu, அழகு அழகு நீ நடந்தால்
Badshah azhagu nee nadanthal nadai azhagu
அழகு அழகு நீ நடந்தால் நடை அழகு - பாட்ஷா"அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு
நீ பேசும் தமிழ் அழகு
அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு அழகு"
ஓஓ நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு
அழகு அழகு
நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல ஒரு கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல
அடி மனம் அடிக்கும் அடிகடி துடிகும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இரங்கி
உயிர் வரை பருகி விடு
ஓஹ்ஹ் முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது
"அழகு அழகு ஆஹ்ஹ்ஹ்ஹ்
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு
நீ பேசும் தமிழ் அழகு
அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு அழகு"
நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே
மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எதற்கு
மது ரசம் அருந்தடுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதடுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா
அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நெருங்கி வரும் இடை அழகு
அழகு
வேல் எரியும் விழி அழகு
அழகு
பால் வடியும் முகம் அழகு
அழகு அழகு அழகு
ஓஓ தங்க முலாம் பூசி வைத்த
ஆங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு
அழகு அழகு அழகு அழகு
The topic on Lyrics - Badshah azhagu nee nadanthal nadai azhagu is posted by - Malu
Hope you have enjoyed, Lyrics - Badshah azhagu nee nadanthal nadai azhaguThanks for your time